தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் டெல்லி சென்றிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தனர். அப்போது அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக் கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல பிரச்னைகள் தமிழகத்திற்கு இருக்கும்போது, தற்போது இந்த மசோதாவை கொண்டு வந்தால் சரியாக இருக்காது என கோரிக்கை வைத்ததாக தெரிகிறாது.
இதனால் நதிநீர் பங்கீடு பிரச்னை ஏற்படும் என தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்படாது என ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நாடாளுமன்றத்தின் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறாது என்பது உறுதியாகியிருக்கிறது.