கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கார்பன் மாதிரிகளின் மீது அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனையில் அவை சுமார் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கீழடியில் எடுக்கப்பட்ட பழம் பொருட்களின் காலகட்டத்தை நிர்ணயம் செய்ய அவை கார்பன் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதா? என மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கலாசார மற்றும் சுற்றலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இண்டு கார்பன் மாதிரிகளை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ளா பீட்டா அனலெடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தோம். அந்த நிறுவனம் ஆய்வு நடத்தி அனுப்பிய அறிக்கையின்படி ஒரு மாதிரி 2160 ஆண்டுகள் பழமைவாய்ந்தது எனவும், மற்றொரு மாதிரி 2200 ஆண்டுகள் பழமை வய்ந்தது எனவும் தெரியவந்திருக்கிறது. ஆனால், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கார்பன் மாதிரிகள் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டது. பழங்கால பொருட்கள் எதுவும் கார்பன் சோதனைக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.