கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மத்தியக்குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள ஆணையர் பால்பாண்டியன், மத்திய கப்பல்துறை அலுவலர் பரமேஸ்வர் பாலி தலைமையில் குளச்சல் துறைமுகத்தில் ஆய்வு நடைபெற்றது. ஒகி புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மீனவ பிரதிநிதிகளுடனும் மத்தியக்குழுவினர் கேட்டறிந்தனர். அதில், குளச்சல் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத 5 பேரை இறந்தவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும், சேதமடைந்த 110 விசைப்படகுகளுக்கும், 200 நாட்டுப்படகுகளுக்குமான நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அதிநவீன தொலை தொடர்பு கருவிகள் வழங்கி, குளச்சலில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் மத்தியக்குழுவிடம் கோரிக்கைவிடுத்தனர்.