அதிகரித்த சிமெண்ட் விலை : கேள்விக்குறியான கட்டுமானத்துறை..?

அதிகரித்த சிமெண்ட் விலை : கேள்விக்குறியான கட்டுமானத்துறை..?
அதிகரித்த சிமெண்ட் விலை : கேள்விக்குறியான கட்டுமானத்துறை..?
Published on

சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.100 ரூபாய் வரை உயர்ந்திருப்பது கட்டுமானத்துறையை வெகுவாக பாதித்துள்ளது. 

பல பிரச்னைகளைச் சந்தித்து வரும் ரியல் எஸ்டேட் துறைக்கு சிமெண்ட் விலை அதிகரிப்பு பேரிடியாக உள்‌ளதாக சிமெண்ட் விற்பனையாளர்கள் வருந்துகின்றனர். சிமெண்ட் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயராத நிலையிலும், சிமெண்ட் விலை மூட்டைக்கு 40 ரூபாய் அதிகரித்திருப்பது விற்பனையாளர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கட்டுமானப் பணியைச் சார்ந்தவர்களையும் பாதித்துள்ளதாக சிமெண்ட் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். 

கடந்த 6 மாதங்களில் ஒரு மூட்டை சிமென்ட் 360 ரூபாயிலிருந்து 430 ரூபாய் வரை விலை அதிகரித்திருப்பது புதிதாக வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளதாகக் தெரிவிக்கின்றனர். வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுபவர்களிடம் ஒப்பந்தம் பெற்றுள்ள நிலையில், சிமென்ட் விலை உயர்ந்திருப்பது குறித்து என்ன கூறுவதென்றே தெரியவில்லை என ஒப்பந்ததாரர்கள் புலம்புகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிமெண்ட் விலையால் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளதால், அதைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com