பேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் - காட்டி கொடுத்த சிசிடிவி

பேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் - காட்டி கொடுத்த சிசிடிவி
பேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் - காட்டி கொடுத்த சிசிடிவி
Published on

சென்னையில் புகையிலைப் பொருளை கேட்டு இளைஞர் ஒருவரை இருவர் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற மாநகரப்பேருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றது. விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தில் சிக்கிய இளைஞரை ஹான்ஸ் என்னும் புகையிலைப் பொருளை கேட்டு இருவர் அடித்து உதைத்ததும், அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவரும் போது பேருந்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.


 
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எழும்பூர் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் தேவன் மற்றும் மெக்கானிக் கமல் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.  இருவரும் மதுபோதையில் இளைஞரிடம் ஹான்ஸ் கேட்டு அடித்து உதைத்ததாகவும், உயிரிழந்த இளைஞரிடம் இருந்து பணம் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த இளைஞர் குறித்து விவரம் எதுவும் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞர் வடமாநில இளைஞர் போல் காணப்படுவதாகவும், அவரிடம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயில் டிக்கெட் மட்டுமே உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com