கோயில் உண்டியலை உடைத்து அலேக்காக பணத்தை அள்ளிச்சென்ற திருடன் - சிசிடிவி காட்சிகள்

கோயில் உண்டியலை உடைத்து அலேக்காக பணத்தை அள்ளிச்சென்ற திருடன் - சிசிடிவி காட்சிகள்
கோயில் உண்டியலை உடைத்து அலேக்காக பணத்தை அள்ளிச்சென்ற திருடன் - சிசிடிவி காட்சிகள்
Published on

பொன்னேரியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கோணியில் மூட்டைகட்டி திருடிச்செல்லும் திருடனை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி அம்மன் ஆலயம் கடந்த ஓராண்டிற்கு முன் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. கடந்த 4-ஆம் தேதி இரவு கோயிலை வழக்கம்போல பூட்டிவிட்டு மறுநாள் காலை கோயில் பூசாரி பூஜை செய்ய வந்தபோது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சுமார் ஓராண்டாக உண்டியல் திறக்கப்படாத நிலையில் 50 ஆயிரம் ரூபாய் வரை காணிக்கைப்பணம் கொள்ளை போயிருக்கலாம் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கோயிலுக்குள் நுழையும் நபர் ஒருவர் முதலில் தனது அடையாளத்தை மறைப்பதற்காக சட்டையை தலை மேல் இழுத்து மூடியபடி உண்டியல் அருகே செல்கிறார். அதன் பின்னர் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை கோணியில் அள்ளி எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்கிறார். இந்த காட்சிகளைக் கொண்டு பொன்னேரி போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடிவந்த நிலையில், பொன்னேரியில் பதுங்கியிருந்த சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த சேதுபதி(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்: கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கோணியில் மூட்டை கட்டி திருடி செல்லும் திருடன் #Tiruvallur | #Ponneri | #Theft pic.twitter.com/KoEjaxYKnN
— PTPrime (@pttvprime) November 9, 2022

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com