திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.
கோகுல்ராஜ் மரண வழக்கை விசாரித்து வந்த, திருச்செங்கோடு டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த விஷ்ணுப்ரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்னை காரணமாக விஷ்ணுப்ரியா உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. அதற்கு அவர் எழுதிவைத்ததாக கூறப்படும் கடிதமும் கிடைத்தது. இருப்பினும், உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே விஷ்ணுப்ரியா உயிரிழந்ததாகவும், மரணத்தில் மர்மம் இருப்பதாக தகவல்கள் எழுந்தது.
இதனையடுத்து, விஷ்ணுப்ரியா மரண வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில், கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஐ, வழக்கை கைவிடுவதாக அறிவித்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “விஷ்ணுப்ரியா மரணம் தற்கொலையே. கொலையல்ல” என்று கூறியுள்ளது. இதனையடுத்து, வழக்கை கைவிடுவது குறித்து நேரில் ஆஜராகி கருத்து தெரிவிக்க விஷ்ணுப்ரியாவின் தந்தைக்கு கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.