முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.
2012ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரந்தா வனப்பகுதி நிலத்தை, தனியார் நிறுவனம் சுரங்கம் அமைப்பதற்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஜெயந்தி நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரந்தா வனப்பகுதியில் 55 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு ஒதுக்க அப்போதைய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மறுத்திருந்த நிலையில் அவருக்கு பின் வந்த ஜெயந்தி நடராஜன் முறைகேடாக ஒப்புதல் அளித்தார் என சிபிஐ வழக்கில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையிலுள்ள ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த சோதனை, இன்று காலை வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசில் இருந்து விலகிய ஜெயந்தி நடராஜன், சோனியா காந்தி மீதும் ராகுல் காந்தி மீதும் புகார்களை கூறியிருந்தார்.