ஜூன், ஜூலை மாதங்களுக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் உரிய நீரை கர்நாடகா வழங்கவில்லை என காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் -9.19 டிஎம்சி, ஜூலை -24 டிஎம்சி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.