காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு!

காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு!
காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு!
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, சென்னை வரும் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, காவிரி தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தல், அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை விரைவில் சந்திப்பது, 177.25 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதகரிக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க இன்று முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்குப்பிறகு காவிரி பிரச்னைக்காக இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் அண்மையில் இறுதித்தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான பங்கை குறைத்து பெங்களுரு குடிநீர் தேவைக்காக அதனை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முத‌மைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com