காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்
காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்
Published on

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை அடுத்து தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் நீண்ட கால பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை அடுத்து தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும், தமிழக எல்லையான ஒசூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பெங்களூருவில் இருந்து ஒசூர் வரை இயக்கப்படும் கர்நாடக மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் இரு மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். தவிர வேலூரில் இருந்து பெங்களூரு புறப்படவிருந்த பேருந்துகளும் நேற்று நள்ளிரவு நிறுத்தி வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க இரு மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com