திடீரென தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் அதிகரிப்பு!

திடீரென தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் அதிகரிப்பு!

திடீரென தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் அதிகரிப்பு!
Published on

தமிழக எல்லையான காவிரி ஆற்றுப்பகுதி பிலிகுண்டுலுவுக்கு திடீரென 300 கன அடியிலிருந்து 1200 கன அடியாக நீர் வரத்து உயர்ந்ததுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக, காவிரியாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் நீர்வரத்து அதிகரித்து 50 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து குறைந்து கடந்த 3 மாதங்களாக காவிரியாற்றில் நீர்வரத்து 200 கன அடியாக சரிந்து, பாறைகளாக காட்சியளித்தது. இந்நிலையில் நேற்றிரவு முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இன்றைக்கு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 1200 கன அடி தண்ணீர் வந்தது. 

காவிரி நீர் வழக்கில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியதையடுத்து, முன் அறிவிப்பு இல்லாமல் கடந்த சில நாட்களுக்கு கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com