காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக பாஜகவினர் போராட்டம் நடத்துவது ஏன் எதற்கு அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பதில் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு எதிராக கர்நாடகாவில் பாஜக போராட்டம் செய்தது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு அவர் கபடி விளையாட்டை சுட்டிக்காட்டி, எதிர் கேள்வியை முன்வைத்தார்.
அதாவது, “உங்கள் ஊரும், உங்கள் பக்கத்து ஊரும் மோதும் கபடி போட்டியில், யாருக்கு ஆதரவாக இருப்பீர்கள்? உங்கள் ஊருக்கா. பக்கத்து ஊருக்கா? தேசிய கட்சியான பாஜகவை பொறுத்தவரை அனைத்து மாநிலத்துக்கும் சமமான நீதியே வழங்குகிறோம். ஒரு மாநிலத்திற்கு ஆதரவாகவோ, வேறு மாநிலத்திற்கு எதிராகவோ செயல்படுவதில்லை" என்றார்.