உச்சநீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியது காவிரி நீர்ப் பங்கீடு வழக்கு, திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த நீர் பங்கீடு குறித்த தீர்ப்பு நாளை மாலை தெரிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அணைகளில் நீர் திறக்கும் அதிகாரம் காவிரி அமைப்பிடமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு, மேலும் காவிரி அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவுக்கு பதில் டெல்லியில் அமைக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகளின் கருத்துக்கு மத்திய அரசு நாளை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை வந்தபோது, திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபல் தாக்கல் செய்தார். அதில் நீர்ப்பங்கீடு தொடர்பான அனைத்து இறுதி முடிவுகளையும் வாரியமே எடுக்கும் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட உச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு சில திருத்தங்களை செய்து வரைவு திட்டத்தை தாக்கல் செய்தது. மேலும் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தின் தீர்ப்பு நாளையோ அல்லது 22,23 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.