வறட்சி காரணமாக கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு : விவசாயிகள் வேதனை

வறட்சி காரணமாக கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு : விவசாயிகள் வேதனை
வறட்சி காரணமாக கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு : விவசாயிகள் வேதனை
Published on

தருமபுரி மாவட்டத்தில் அரூர் அருகே உள்ள வார சந்தையில் வறட்சி காரணமாக கால்நடைகளை விற்பனை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிதுள்ளனர். 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சேலம் பிரதான சாலையில் வாரந்தோறும் செயல்படும் மிகப்பெரிய வாரச்சந்தை கோபிநாதம்பட்டி கூட்டுரோடு புதன் சந்தை. மிகவும் பழமையான இந்த சந்தையில் காய்கறிகள், விவசாய தளவாட கருவிகள் விற்கப்படுகின்றன. தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோழி, ஆடு, மாடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சந்தையிலிருந்து மாடுகள் கேரளா மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக, அரூர் அடுத்த புதன்சந்தையில் விற்பனைக்காக கால்நடைகள் வரத்து அதிகரிண்துள்ளது. கடந்த சில வாரங்களாக கால்நடைகள் குறைவாக வந்த நிலையில், இன்று கால்நடைகள் வரத்து அதிகரித்தது 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனால் கடந்த வாரத்தை விட கால்நடைகள் விலை குறைந்தது. இன்றைய சந்தையில் கலப்பின மாடு ஒன்று 20 ஆயிரம் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக் கன்று ஒன்று 3,000 முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.

மேலும் மாடுகளை கேட்பதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டது. கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்பனையானதால், பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை விற்காமல் திரும்பி சென்றனர். இன்றைய வார சந்தையில், கால்நடைகள் சுமார் ரூ.25 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் தொடரும் வறட்சியால், வரும் காலங்களில் கால்நடைக்கான தீவன தட்டுப்பாடு காரணமாக மேலும் கால்நடைகள் வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வருவது அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com