‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்

‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்
‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை பெண்ணின் உறவினர்கள் காரில் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூரைச் சேர்ந்த சிவகுமாரும், வெங்கடதாம்பட்டியைச் சேர்ந்த சுகன்யாவும் காதலர்கள். வீட்டின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை பதிவு செய்ய தம்பதி போச்சம்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வருவதாக சுகன்யாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. 

பனங்காட்டூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு சிவகுமார் - சுகன்யா தம்பதி காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது தம்பதி சென்ற காரை மற்றொரு காரில் வந்த சுகன்யாவின் உறவினர்கள் துரத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com