அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளையும் ரத்து செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கப்பட்டதில் ஊழல் செய்த்தன் மூலம் கோடிக்கணக்கான சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை கோவை பிரிவும் மற்றொரு வழக்கை பதிவு செய்தது.
இந்நிலையில் இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுமணி இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து வேலுமணி மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தொடர்ந்த வழக்குகள் நாளை செப்டம்பர் 5 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.