தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு குறித்து விமர்சித்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்து சுதந்திரத்தின்படி நியாயமான முறையில் பதிவிட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது, அரசை தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
கழகத்தொண்டர்களால் எஃகு கோட்டையாக பாதுகாக்கப்படும் கழகத்திற்கு எதிரான இந்த அடக்குமுறையை திமுக உடனே நிறுத்த வேண்டும். இந்த அடக்குமுறையையும்,பொய் வழக்குகளையும் சட்டரீதியாக சந்திக்கும் வல்லமை கழகத்திற்கும், அதன் சட்டப்பிரிவுக்கும் உண்டு என ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்