மோடி பிறந்தநாளில் மாட்டு வண்டி பந்தயம் அனுமதிகோரிய வழக்கு- காவல்துறை பதிலளிக்க உத்தரவு

மோடி பிறந்தநாளில் மாட்டு வண்டி பந்தயம் அனுமதிகோரிய வழக்கு- காவல்துறை பதிலளிக்க உத்தரவு
மோடி பிறந்தநாளில் மாட்டு வண்டி பந்தயம் அனுமதிகோரிய வழக்கு- காவல்துறை பதிலளிக்க உத்தரவு
Published on

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடும் வகையில் பாஜகா கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் கிராமத்தில் போட்டிகள் நடத்த அனுமதி கோரி எஸ்.பி.யிடம் விண்ணப்பித்ததாகவும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில், மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் முக்கிய நிர்வாகிகள், விஐபிகள் கலந்து கொள்வதால் அனுமதி வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தான், அதில் பாரபட்சம் கூடாது என்றனர். பிறந்தநாள் விழா என்றால், நலத்திட்டங்கள், இனிப்பு வழங்கலாம், மாட்டு வண்டி போட்டி தான் நடத்த வேண்டும் என்பது கிடையாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com