தாலுகா அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்றகோரிய வழக்கு- தள்ளுபடி செய்தது மதுரைகிளை

தாலுகா அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்றகோரிய வழக்கு- தள்ளுபடி செய்தது மதுரைகிளை
தாலுகா அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்றகோரிய வழக்கு- தள்ளுபடி செய்தது மதுரைகிளை
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவிலை அகற்ற கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

ஆதிச்சநல்லூரில் 2019ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. அந்த வளாகத்தில் 2020ஆம் ஆண்டு விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத்தலங்கள் கட்டக்கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதால், கோவிலை அகற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, அரசு அலுவலக வளாகத்தில் கோவில் கட்டிய போதே ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தற்போது ஏன் வழக்கு தொடரப்பட்டது என கேள்வி எழுப்பியது. மேலும், போதிய ஆவணங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com