குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலந்தூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர்- சிறுமிகள் என இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர். இந்தப் பேரணியால் ஆலந்தூர் சுற்று வட்டாரத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரம் பேர் மீது பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக ஒன்று கூடுவது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.