அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் சில்மிஷம் - தேனியில் 3 முன்னாள் ராணுவ வீரர்கள் கைது

அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் சில்மிஷம் - தேனியில் 3 முன்னாள் ராணுவ வீரர்கள் கைது
அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் சில்மிஷம் - தேனியில் 3 முன்னாள் ராணுவ வீரர்கள் கைது
Published on

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் மதுபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதை ஆசாமிகள் தாக்கியதில் வனக்காவலர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். காயமடைந்த வனக்காவலர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், தேனியை பாலமுருகன், அருப்புக்கோட்டையை சேர்ந்தவ கந்தசாமி உள்ளிட்ட மூவரும் முன்னாள் ராணுவத்தினர். மேலும் இவர்களது நண்பரான ஏழுமலையைச் சேர்ந்த சரவணன், திருப்பரங்குன்றம் வடிவேலு உள்ளிட்ட 5 பேரும் கும்பக்கரை அருவியில் மதுபோதையில் குளித்தபோது அங்குவந்த பெண்களிடம் தகாத முறையில் ஈடுபட்டு சில்மிஷம் செய்ததால் பெண்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகாரின் கொடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி பிடித்தபோது போதை ஆசாமி ஒருவர் அவர்கள் வந்த காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து வனத்துறையினரை தாக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சூழ்ந்துகொண்டு அவர்களிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவர்களை மடக்கிப் பிடித்து அசம்பாவிதங்களை தவிர்த்துள்ளனர்.

இது தொடர்பாக பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் வந்தபோது, மதுபோதையில் கீழே விழுந்து மண்டை உடைந்த போதை ஆசாமி ஒருவர் உட்பட அந்த 5 பேரும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வரமறுத்து அங்கேயே இரண்டு மணி நேரமாக சுற்றுலாப்பயணிகளையும் அங்கு சுற்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு 108 வாகனம் வரவழைக்கப்பட்டது. அதிலும் ஏற மறுத்து மேலும் ஒரு மணி நேரம் அதே பகுதியில் சாலையில் படுத்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேலும் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு போதை ஆசாமிகள் நால்வரையும் 108 வாகனத்தில் அழைத்துவந்ததுடன் காயமடைந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீதமுள்ள நான்கு பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வனக்காவலரை கத்தியால் தாக்க முற்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த மது போதை ஆசாமிகளால் கும்பக்கரை அருவியில் மூன்று மணி நேரமாக சுற்றுலாப்பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதில் மூவர் முன்னாள் ராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com