கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் - 5 பேர் மீது வழக்குப் பதிவு

கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் - 5 பேர் மீது வழக்குப் பதிவு
கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் - 5 பேர் மீது வழக்குப் பதிவு
Published on

கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், காவலர்களுக்கும் அவ்வமைப்பை சேர்ந்தவர்களுக்கும் நடைபெற்ற தள்ளு முள்ளு சம்பவம் தொடர்பாக அவ்வமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு எதிராக த.பெ.தி.க, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த நபர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால், காவலர்களுக்கும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த காளிதாஸ், இந்துமுன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர் எஸ் எஸ் அமைப்பின் அருண், கருப்புசாமி ஆகிய ஐந்து பேர் மீது இரு பிரிவுகளில் பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் , சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com