பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, அக்கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லைக் கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.