பின்னணி பாடகி சின்மயிக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதையடுத்து சின்மயி ட்விட்டரில் மகிழ்ச்சியை
வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் புகாரை அடுத்து தமிழகத்திலும் மீ டூ (#MeToo) விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயின் புகார் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சின்மயி, கர்நாடக சங்கீத உலகத்திலும் அவ்வளவு அட்டூழியம் நடக்கிறது என்று கூறினார்.
இந்நிலையில் கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கு தனது ட்விடடர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சின்மயி, தனக்கு ஆதரவு கரம் நீட்டிய கர்நாடக இசைக் கலைஞர்களின் பட்டியலையும் இணைத்துள்ளார். அதில் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் கண்ணிய குறைவாக நடந்து கொள்ளும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டியது அவசியம் என கர்நாடக இசைக் கலைஞர்கள் வலியுறுத்தி இருக்கும் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், சின்மயி போன்றவர்களுக்கு உலகம் முழுவதும் இருக்கும் கர்நாடக சபாக்களும், கலாசார அமைப்புகளும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் கர்நாடக இசை சமூகமும் பாதுகாப்புடன் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.