தூத்துக்குடி | 55,000 டன் உர மூட்டைகளுடன் தரைதட்டி நின்ற சரக்கு கப்பல்; முடங்கிப் போன இறக்குமதி பணி!

தூத்துக்குடியில் 55 ஆயிரம் டன் உரம் ஏற்றி வந்த சரக்கு கப்பல் துறைமுக நுழைவு வாயிலில் தரைதட்டி நின்றுள்ளது.
தரை தட்டி நின்ற சரக்கு கப்பல்
தரை தட்டி நின்ற சரக்கு கப்பல்file image
Published on

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து  சரக்கு பெட்டிகள் மூலம் உரம், நிலக்கரி, சீனி உள்ளிட்ட  பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு எகிப்து நாட்டிலிருந்து ஜென்.கோ பிடியேட்டர் என்ற சரக்கு கப்பல் 55,000 டன் உரத்தை ஏற்றி வந்துள்ளது. இந்தக் கப்பலுக்கு நேற்று காலை துறைமுகம் உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. துறைமுக நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்லும் போது கடலில் ஆழம் குறைவான பகுதிக்குக் கப்பல் சென்றதால் கப்பல் தரைதட்டி நின்றுள்ளது.

தரை தட்டி நின்ற சரக்கு கப்பல்
தாயைக் கொன்று சூட்கேஸில் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்ற இளம்பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

இதைத்தொடர்ந்து இழுவை கப்பல் மூலம் துறைமுக ஊழியர்கள் தரை தட்டிய கப்பலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உரம் இறக்குமதி செய்யும் பணி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி துறைமுகம்
வ.உ.சி துறைமுகம்

தூத்துக்குடி துறைமுகத்தில் உரம் ஏற்றி வந்த கப்பல் தரைதட்டி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரை தட்டி நின்ற சரக்கு கப்பல்
சாலையில் கவிழ்ந்த பீர் பாட்டில்கள்.. மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com