தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி சில பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், நெய், ஏலக்காய் மற்றும் பால் பொருட்கள் விலை அதிகரிப்பால் இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக விலை குறைந்து காணப்பட்ட ஏலக்காய், தற்போது ஒரு கிலோ 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று, நெய் மற்றும் பால் சார்ந்த மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், விற்பனையாளர்கள் தங்கள் லாபத்தை குறைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.