மதுரை | 5 அடி உயரத்திற்கு பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்.. நூலிழையில் உயிருடன் மீட்கப்பட்ட மூவர்!

மதுரை மாநகரில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தில் சிக்கிய கார்
வெள்ளத்தில் சிக்கிய கார்pt web
Published on

மதுரை மாநகரில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் தத்தனேரி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் கருடன் தரைப்பாலம் உள்ளிட்ட ரயில்வே தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதில் மணி நகரம் ஒர்க்ஷாப் ரோடு பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீரானது சுமார் 5 அடி உயரத்திற்கு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது பாலத்தை கடக்க முயன்ற காவல் துறை வாகனம் வெள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து வாகனத்தில் இருந்த காவலர்கள் நீந்தித் தப்பினர்.

வெள்ளத்தில் சிக்கிய கார்
12 லட்சம் பேர்! மக்கள் வெள்ளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா!

இதனைத் தொடர்ந்து பின்னால் 3 பேருடன் வந்த காரும், மழை வெள்ளத்தில் சிக்கியது. இதைப் பார்த்த காவல் துறையினர், கடும் சிரமத்துடன் காரில் இருந்த மூவரையும் மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியபோது அப்பகுதி மக்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சென்றதால், 3 பேர் வந்த கார் முழுவதும் நீரில் மூழ்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com