கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Published on

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாத ஆலைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உரிமம் பெறுவதற்கான வழி முறைகளை அரசு விரைந்து உருவாக்க வேண்டும் என்று கூறி கேன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1689 குடிநீர் உற்பத்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 400-க்கும் மேற்ப்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளின் மூலம் கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதை தடுக்க உயர்நீதிமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனிடையே கேன் உரிமையாளர்கள் நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதாக கூறி வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் கேன் உரிமையாளர்கள் அவர்களது பணியை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே கேன் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கான வழி வகைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கேன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர். ராஜசேகரன் கூறும்போது “ நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்படுவதாக கூறி கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உரிமம் இல்லாத ஆலைகளை மூட உத்தரவிட்டது. இந்தச் சட்டம் 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு தொடங்கப்பட்ட ஆலைகளுக்கு பொருந்த வேண்டும் என்று கூறினார். மேலும் அதற்கு முன்னர் தொடங்கப்பட்ட ஆலைகள் முறையான உரிமம் பெறுவதற்கான வழிவகைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இது மட்டுமன்றி நிலத்தடி நீரை எடுப்பதற்கு சில கட்டுபாடுகளும் இருக்கின்றன. இதனால் சிலர் உரிமம் வாங்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கிட்டத்தட்ட 1300 குடிநீர் ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். எனவே தமிழக அரசு விரைந்து உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எடுக்க வேண்டும் என்று கூறி இந்த வேலைநிறுத்ததை தொடங்கியுள்ளோம்” என்று கூறினார்.

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com