டீ செலவு ரூ.28; வடை ரூ.10; தேர்தல் செலவு விவரங்களை அச்சிட்டு வழங்கிய வேட்பாளர்..!

டீ செலவு ரூ.28; வடை ரூ.10; தேர்தல் செலவு விவரங்களை அச்சிட்டு வழங்கிய வேட்பாளர்..!
டீ செலவு ரூ.28; வடை ரூ.10; தேர்தல் செலவு விவரங்களை அச்சிட்டு வழங்கிய வேட்பாளர்..!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற ஒருவர், தனது தேர்தல் செலவு விவரங்களை விநோதமான முறையில் அச்சிட்டு அதனை மக்கள் அறியும் வகையில் விளம்பரபடுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு துரைகுணா என்ற குணசேகரன் பேட்டியிட்டார். மொத்தம் 1,532 வாக்குகளில் 27 வாக்குகள் பெற்று துரைகுணா வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் தனது தேர்தல் செலவு விவரங்களை துண்டறிக்கைகளாக வெளியிட்டதோடு, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையிலும் அவர் ஒட்டியுள்ளார். மேலும் தனது ஊராட்சி மக்களுக்கும் அந்த அந்த துண்டறிக்கையை வழங்கி வருகிறார். அவரின் இந்த துண்டறிக்கை விநியோகம் கறம்பக்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த துண்டறிக்கையில் அவர் தேர்தலில் போட்டியிட்டதற்காக செலவு செய்ததாக வீட்டு வரி ரூ.44, பிரமாண பத்திரம் நோட்டரி வழக்கறிஞர் செலவு ரூ.500, வேட்புமனு தாக்கல் கட்டணம் ரூ.300, நோட்டீஸ் செலவு ரூ.10,200, நோட்டீஸ் ஒட்ட மைதா மாவு வாங்கியது ரூ.100, பெருங்களூரு உருமநாதர் கோயில் வழிபாட்டுக்கான பூஜை பொருட்கள் வாங்கியது ரூ.300, அர்ச்சனை சீட்டு ரூ.5, உண்டியல் போட்டது ரூ.11, வாக்கு சேகரிப்பின்போது இருவருக்கு வடை வாங்கிக் கொடுத்தது ரூ.10, தேநீர் குடித்தது ரூ.28 உட்பட மொத்த செலவு தொகை ரூ.18,481 என பட்டியலிட்டுள்ளார். மேலும், என்னை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நன்றியும், அன்பும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து துரை குணா கூறியபோது, ‘ வாக்காளர்கள் ரொக்கத்துக்கு விலைபோய் விடக்கூடாது. அப்படி போனால் பின் விளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதையே எனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வாக்கு சேகரித்தேன். எனினும், மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுக்கு நான் செய்த செலவு விவரங்களை துண்டறிக்கையாக அச்சிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையில் ஒட்டியதோடு, ஊர் மக்களிடம் விநியோகித்துள்ளேன். மற்ற வேட்பாளர்களைப் போல் என்னையும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com