தூத்துக்குடியில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை

தூத்துக்குடியில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை
தூத்துக்குடியில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை
Published on

தென் மாவட்‌டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம்‌ அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 290 பேர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாக தினமும் சராசரியாக 120 பேரும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி‌ மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புற்றுநோய் பாதித்தவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதில் தென்மாவட்டங்களில் இருந்து குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புற்றுநோயோடு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

2016ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 85 பேரும், 2017ஆம் ஆண்டு 142 பேரும் சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஒரே ஆண்டில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் நோய் முற்றி கடைசி‌கட்டத்தில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்களை காப்பாற்ற முடியாமல் போவதாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com