புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: 10,000 பேர் பங்கேற்பு

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: 10,000 பேர் பங்கேற்பு
புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: 10,000 பேர் பங்கேற்பு
Published on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

டெரா பாக்ஸ் ரான் சென்னை என்ற பெயரில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 10,000 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றன. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இந்த டெரா பாக்ஸ் ரான் சென்னை புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வருடம் தோறும் ஜஜடி வளாகத்தில் நடைபெறும். இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற பேரணியில் 18000 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com