பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கால்டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மத்திய அரசு புதிதாக கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், புதிய மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தமிழகம் முழுவதும் கால்டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், ஊபர், ஒலா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக சதவீதம் கமிஷன் எடுத்துக்கொள்வதால், தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.