புத்தாண்டை முன்னிட்டு பெரம்பலூரில் அஸ்வின்ஸ் சார்பில் 3 நாள் கேக் திருவிழாவில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையில் கார்டுன் பொம்மைகளுடன் கேக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில், ஆங்கில புத்தாண்டையொட்டி, டிச.,30, 31 மற்றும் ஜன- 1 ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் பெரம்பலுார் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் கேக் திருவிழா நடக்கிறது. இதில், நுாற்றுக்காணக்கான மாடல்களில் மல்டி கலரில் கேக்குகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டு பிறப்பை, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து ஆடிப்பாடி வரவேற்பது வழக்கம். இந்தாண்டுக்கான ஆங்கில புத்தாண்டு நாளை பிறக்க உள்ளது. இந்த 2022ம் ஆண்டு பிறப்பையொட்டி, பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் கேக் திருவிழா நடத்த திட்டமிட்டது.
இதன்படி, இந்த கேக் திருவிழா மூன்று நாட்கள் நடக்கிறது. இதனை, அஸ்வின்ஸ் குழும தலைவர் கே.ஆர்.வி.கணேசன் குத்துவிளக்கேற்றி கேக் திருவிழாவை துவக்கி வைத்தார். இதில், கொரோனா விழிப்புணர்வு கேக்குகள், துாய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கேக்குகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கவரும் கார்டுன் பொம்மை கேக்குகள் என பலதரப்பட்டவை வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சாக்கோடிரபுல், ரெட்வெல்வெட், ரிச்ப்ளம் கேக், மோல்டு கேக், ஸ்டாபெர்ரி, நெய் கேக், கோதுமை கேக், பீட்ரூட்கேக், பிளாக்கரண்ட் கேக், சாக்லெட் கேக், மெல்டிஸ் கேக், பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ஜாக்கோரபுல், ரெயின்போ, நெட்வெல்வெட், புளுபெரி, ஸ்டாபெரி, பட்டர்ஸ்காச், பிளாக் கன்னெட், ஜாக்லெட், வெண்ணிலா, ஹனிகேக் டரிச் பிளைன்கேக், மோல்ட்டு, பொக்கே, பிளைன் கேக் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான கேக்குகள், மல்டி கலரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கேக் திருவிழாவில் பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கேக்குகள் உடனுக்குடன் தயாரித்து தரப்பட்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.