போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
Published on

8 நாட்களாக நடைபெற்றுவந்த போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 8ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்ந்தது.

பெரும்பாலான அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசுப் பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தது. இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர் விவகாரத்தில், அரசு, தொழிலாளர் இடையே மத்தியஸ்தம் செய்ய நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நியமனம் செய்தது.

இந்நிலையில் 8 நாட்களாக நடைபெற்றுவந்த போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை காலை முதல் வழக்கம்போல வேலைக்கு செல்வார்கள் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com