மஞ்சுவிரட்டின் போது கிணற்றில் விழுந்து காளை உயிரிழப்பு - நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு

மஞ்சுவிரட்டின் போது கிணற்றில் விழுந்து காளை உயிரிழப்பு - நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு
மஞ்சுவிரட்டின் போது கிணற்றில் விழுந்து காளை உயிரிழப்பு - நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு
Published on

வாணியம்பாடி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது கிணற்றில் தவறி விழுந்து காளைமாடு உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுவிக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்த கோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சின்னப்பள்ளி குப்பம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் காளைமாடு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய கொத்த கோட்டை நிர்வாகிகள் பூபாலன், சங்கர் மற்றும் பழனி ஆகியோரை கைது செய்தனர். இதை கண்டித்து வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில் கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com