செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் சின்னபள்ளி குப்பம் பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு, மின்னூர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ரூ.12.42 கோடி மதிப்பில் 236 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதை கடந்த மாதம் 29 ஆம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட 18 நாட்களுக்குள்ளாகவே மையூரன் - விஜி தம்பதியினர் தங்களது குழந்தையுடன், குடியிருப்பில் குடியேற சென்ற போது, குடியிருப்பு கட்டட மேல்தள பூச்சு இடிந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மையூரன் தனது குழந்தைகளுடன் குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இலங்கை தமிழர் குடியிருப்பில் கட்டப்பட்ட பெரும்பாலான குடியிருப்புகள் மிகுந்த சேதமடைந்துள்ளதாக இலங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.