திருச்சி | கண்ணூத்து கிராமத்தில் கால்பதித்த BSNL.. மகிழ்ச்சியில் கிராம மக்கள்...

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொலைத்தொடர்பு வசதியே இல்லாமல் இருந்த ஓரு கிராமத்தில் பி.எஸ்.என்.எல் தற்போது கால்பதித்துள்ளது.
கண்ணூத்து கிராமத்தில் பி.எஸ்.என்.எல்
கண்ணூத்து கிராமத்தில் பி.எஸ்.என்.எல்PT Web
Published on

செய்தியாளர்: சார்லஸ்

2,000 பேர் வசிக்கும் கண்ணூத்து கிராமம் திருச்சி மணப்பாறை அருகில் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக தொலைத் தொடர்பு சேவை கிட்டாமல் இருந்து வந்துள்ளது இந்த கிராமம். அவசரத் தேவையை யாருக்கும் பகிர வேண்டும் என்றால் கூட 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.

Villagers
Villagerspt desk

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவியர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 108 சேவையை பெற வேண்டுமென்றால் கூட சில கிலோ மீட்டர் தூரம் அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது.

நான்கு புறமும் மலைகள் சூழ்ந்திருந்த இந்த கிராமத்தில் டவர்களை அமைக்க தனியார் செல்போன் நிறுவனங்கள் தயக்கம் காட்டின. தற்போது இந்த கிராமத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்காலிக செல்போன் கோபுரம் ஒன்றை அமைத்துள்ளது. செல்போன் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சி அந்த கிராம மக்களின் முகங்களில் தெரிகிறது.

கண்ணூத்து கிராமத்தில் பி.எஸ்.என்.எல்
கும்பகோணம்: தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்ட செல்போன் சேவைகளை இப்போது கண்ணூத்து மக்களும் பெற்று வருகின்றனர். புதிய உணர்வுடன் இருக்கும் இம்மக்கள் தற்காலிக செல்போன் கோபுரத்தை தங்களுக்கு நிரந்தரமாக்கி தர வேண்டும் என அரசை வேண்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com