மாறன் சகோதரர்கள் ஆஜராகாததால் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

மாறன் சகோதரர்கள் ஆஜராகாததால் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
மாறன் சகோதரர்கள் ஆஜராகாததால் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
Published on

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜராகததால், டிசம்பர் 11 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் இணைப்புகளை தன்னுடைய குடும்ப நிறுவனமான சன் டிவிக்கு பயன்படுத்தியதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும், அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோருவது குறித்து வாதாட இருப்பதால் மாறன் தரப்பில் நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் மாறன் சகோதர்களை விடுவிக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com