‘எப்படி இருந்த இடம்... இப்படி ஆகிடுச்சே...😔’ - குப்பைக் காடாக காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 15 ஆயிரம் இருக்கைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில், காலி தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டு, மாநாட்டு திடல் குப்பைக் காடாக காட்சியளிக்கிறது.
குப்பைக் காடாக காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல்
குப்பைக் காடாக காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல் pt desk
Published on

செய்தியாளர்: காமராஜ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வி.சாலையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்திய அக்கட்சித் தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். இந்த மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

குப்பைக் காடாக காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல்
குப்பைக் காடாக காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல் pt desk

இதில் மாநாடு திடலில் அமைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் இருக்கைகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் உடைக்கபட்டுள்ளன.

மாநாட்டிற்கு வந்தவர்களில் அதிகமானோர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தியதால் மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள், காலணிகள் என குப்பைக் காடாக மாநாட்டு திடல் பகுதி காட்சியளிக்கிறது. இதையடுத்து அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குப்பைக் காடாக காட்சியளிக்கும் தவெக மாநாட்டு திடல்
“விஜய்யின் திராவிடம், தமிழ் தேசியம் கொள்கைகளோடு ஒத்துப் போகவில்லை” – சீமான்!

அதேபோல மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த மின் விளக்குகள் மற்றும் மேடையை அகற்றும் பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாநாட்டு திடலை பார்வையிட்டு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.

இந்த மாநாடு காரணமாக நேற்றைய தினம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் கொஞ்சமாக நெரிசல் குறைந்ததை அடுத்தே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com