தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் கறிக்கோழியின் விலை சரிவை சந்தித்துள்ளது.
தொடர் பண்டிகைகளின் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்திற்கு மேல் உயர்ந்த கறிக்கோழியின் விலை, அதன்பிறகு விலையேற்றத்துடனே காணப்பட்டது. இந்நிலையில் கறிக்கோழி விலை, கடந்த 3 நாட்களில் 9 ரூபாய் விலை குறைந்து கிலோ 56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழிகள் தேக்கமடைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். மற்றொரு புறம் கோடைக்காலம் வருகையையொட்டி விற்பனை குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கறிக்கொழி விலை குறைக்கப்பட்டுள்ளதால், சந்தைகளில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.