10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ரயில்பாதை திட்டம்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ரயில்பாதை திட்டம்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ரயில்பாதை திட்டம்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

ஐந்து மாவட்டங்களின் மக்கள் பயன் பெறும் நோக்கில் துவக்கப்பட்ட நகரி-திண்டிவனம் ரயில் பாதை திட்டம் பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் கிடப்பில் கிடக்கிறது.

ஆந்திர மாநிலம் நகரி முதல் திண்டிவனம் வரை சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது‌. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தின் சித்தூர், தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் பலன் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக 189 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 18 இடங்களில் புதிய ரயில் நிலையங்கள், 26 பெரிய அளவிலான பாலங்கள், 200 சிறிய பாலங்கள், லெவல் கிராசிங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. திட்ட மதிப்பீட்டுக்கு ஏற்ப முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமையிலான குழு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை ஆய்வு செய்தும், ரயில் நிலையங்கள் அமைய உள்ள பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்தும் வருகிறது. ஆய்வோடு நின்றுவிடாமல் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கி விரைந்து முடிக்க வேண்டும் என்பதே ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com