அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்த ஆய்வு - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

”தான் ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரம், படிப்பு, முன்னேற்றக் வளர்ச்சி ஆகியவை கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை PT
Published on

கடலோரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த கோரிய வழக்கு.

’தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தை செயல்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதிநிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ - அரசு தரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்ந்த பிரேசில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு,

”நான் ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். மீனவ மக்களின் வாழ்வாதாரம், படிப்பு, முன்னேற்றக் வளர்ச்சி ஆகியவை கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

சுமார் 31,000 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும், மதிய உணவு திட்டத்தில் பயன் பெறுவதற்காகவே ஏழ்மையான மக்களின் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட கடலோர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லை.

NGMPC22 - 147

கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதாரம் சில நேரங்களில் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மீன் பிடித்து தொழில் இயற்கை சீற்றம், சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் வருடத்தில் பாதுகாக்கும் கடலுக்கு நீட்டிக்க செல்ல முடியாமல் சூழல் உருவாகிறது.

இதனால் மீனவ குழந்தைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏழ்மையின் காரணமாக மீனவர் குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். கடலோர கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகும்.

எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த 29ம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத்தரப்பில் இத்திட்டம் அரசாணை வெளியிடப்பட்டு 15.09.2022 முதல் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுப்பள்ளிகள் முதல் அனைத்துப்பள்ளிகளிலும் திட்டத்தை கொண்டு செல்வதற்கு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நிதிநிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசுத்தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com