போர்வெல் இயந்திரத்தால் போடப்பட்ட துளைகளை ரிக் இயந்திரத்தால் அகலபடுத்தும் பணி 60 அடிக்கு மேலாக சென்று தீவிரம் அடைந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் 73 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. கடினமானப் பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
ரிக் இயந்திரத்தால் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் பாறைகளைத் துளையிட்டு குழியை தோண்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி போர்வெல் மூலம் மொத்தம் 5 துளைகள் போடப்பட்டன. ஒரு துளை 40 அடியும், மற்ற 4 துளைகளும் சுமார் 15 அடி ஆழமும் போடப்பட்டன.
போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிவடைந்த பிறகு, ரிக் இயந்திரம் மூலம் அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தற்போது 63 அடிக்கும் மேல் அகலபடுத்தும் பணி முடிந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.