பாறைகள் கடினமாக இருப்பதால் மீண்டும் போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் தொடங்கியுள்ளன.
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தோண்டப்பட்ட குழிக்குள் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தபின் தொடர்ந்து குழி தோண்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குழிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் பாதுகாப்பு ஏணி வழியே புதுக்கோட்டையைச் சேர்ந்த அஜித்குமார் என்ற வீரர் இறங்கினார். 55 அடிக்கு கீழ் பாறையின் தன்மை குறித்து அவர் ஆய்வு செய்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மேலே வந்தார். அவர் வரும்போது கல் ஒன்றினை ஆய்வுக்காக எடுத்து வந்தார்.
இந்நிலையில் ரிக் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குழியில் மீண்டும் போர்வெல் இயந்திரத்தால் துளையிடப்படுகிறது. ஏற்கெனவே துளையிடப்பட்ட பகுதிகள் ரிக் இயந்திரத்தால் தோண்டப்பட்டதை அடுத்து மீண்டும் துளையிடப்படுகிறது.