‘மூத்த குழந்தைதான்’.. பாகன் உதயகுமார் - தெய்வானை இடையேயான பாசப்பிணைப்பு.. ஆரம்பம் முதல் முடிவு வரை!

திருச்செந்தூர் யானை தெய்வானையை குடும்பத்தில் மூத்த குழந்தையாக பாவித்து அன்பு காட்டி வளர்த்த யானைப்பாகன் உதயகுமார்.
பாகன் உதயகுமார்
பாகன் உதயகுமார்pt desk
Published on

திருச்செந்தூர்: தாக்கிய பின் பாகனை எழுப்ப முயன்ற தெய்வானை... நடந்தது என்ன? – வனத்துறை விளக்கம்உபயமாக வந்த தெய்வானை

செய்தியாளர் பே.சுடலைமணி செல்வன் 

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானையை குடும்பத்தில் மூத்த குழந்தையாக பாவித்து அன்பு காட்டி வளர்த்த யானைப்பாகன் உதயகுமார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பலுகளைச் சேர்ந்தவர்கள் சதாசிவன் நாயர் - விலாசினி. இத்தம்பதியினர் கடந்த 1975 ஆம் ஆண்டு பணி நிமித்தம் காரணமாக திருச்செந்தூர் வந்துள்ளனர். இவர்களுக்கு செந்தில், உதயகுமார் என இருமகன்கள்.

சதாசிவன் நாயர் திருச்செந்தூரில் கோவில் யானை பாகனாக பணியாற்றி வந்துள்ளார். அந்த சமயத்தில் அவரது மகன்கள் இருவரும் யானை பாகனாவும் பயிற்சி பெற்றுள்ளனர். அந்த சமயத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு குமரன் தெய்வானை என இரண்டு யானைகள் உபயமாக வழங்கப்பட்டு கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

பாகன் உதயகுமார்
’OPSக்கு துரோகம் செய்தது யார்?’ அதிமுகவில் உட்கட்சிப் பூசல்.. மேடையில் வெளுத்த முன்னாள் அமைச்சர்கள்!

மூத்த குழந்தை

இதற்கிடையில் சதாசிவன் நாயர் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது வேலை அவரது மூத்த மகனான செந்திலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயத்திலேயே செந்தில் சகோதரர் உதயகுமாருக்கும் யானைகளை பராமரிப்பதற்காக தற்காலிக பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அடுத்த சில வருடங்களில் அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

பாகன் உதயகுமார்
பாகன் உதயகுமார்pt desk

அடுத்த சில வருடங்களில் கோவிலில் இருந்த குமரன் யானை உயிரிழந்தது. இதற்கிடையில் உதயகுமாருக்கு ரம்யா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், இத்தம்பதிக்கு அக்ஷரா, அகல்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருச்செந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரை தவிர மூன்றாவதாகவும் தனது மூத்த குழந்தையாகவும் திருச்செந்தூர் கோவில் தெய்வானை யானையை பாவித்து வளர்த்து வந்துள்ளனர். வீட்டில் வளரவில்லை என்றாலும் தங்களது குடும்பத்தில் மூத்த குழந்தையாகவே தெய்வானை யானை வளர்ந்துள்ளது.

பாகன் உதயகுமார்
அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்.. தேர்தல் களத்தில் நடந்த ’சோதனை’ வேட்டை - ரூ.1000 கோடி சிக்கியதா?

முக்கியப்பங்கு வகித்த உதயகுமார்

குமரன் யானை உயிரிழந்த பின்னர் தெய்வானை யானையை மிகவும் அன்புடனும் பாசத்துடனும் செந்திலும், உதயகுமாரும் பராமரித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தலைமையாகவும் உறுதுணையாகவும் தலைமை பாகன் ராதாகிருஷ்ணன் இருந்துள்ளார்.

உதயகுமாரின் மனைவியும், குழந்தைகளும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்யும் போதெல்லாம் தெய்வானை யானையை பார்க்க தவறுவதில்லை. அங்கு செல்லும் அவரது குடும்பத்தினர் தெய்வானை யானைக்கு பழங்கள் கொடுத்து மகிழ்வார்களாம். தெய்வானை யானையும் இவர்களை கண்டதும் ஆனந்தத்தில் தனது தும்பிக்கையால் ஆசீர்வாதம் வழங்கி மகிழுமாம்.

கோவில் யானை தெய்வானை
கோவில் யானை தெய்வானைPT

தெய்வானை யானை குளியல் தொட்டியில் குளிக்கும்போது கூட உதயமாரிடம் பாசமாகவும், அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடி குளித்து மகிழுமாம். சில நேரங்களில் தனது தும்பிக்கையால் தண்ணீரை உதயகுமார் மீது பீச்சியடித்து மகிழுமாம். இது தவிர கோவிலில் நடைபெறும் திருவிழா நாட்களில் யானையை அலங்காரம் செய்து தங்கச் சப்பரம் புறப்பாடு, தேர் திருவிழா போன்ற நாட்களில் யானை சுவாமி முன்பு அலங்காரத்துடன் நடந்து வரும். மேலும் கோவிலில் மாலை நேரத்தில் தங்கத்தேர் புறப்பாடு சமயத்தில் யானை அலங்கரிக்கப்பட்டு கோவில் கிரி பிரகாரத்தில் வலம் வரும். ஆடி சுவாதி நாளில் கோவில் முன்புள்ள கொடிமரத்தின் முன்பு திருநீறு மற்றும் மாவு பொடி வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யானையை அலங்காரம் செய்து வெள்ளையானையாக வெளியே அழைத்து வருவார்கள். இதில் முக்கிய பங்கு வகித்தார் யானைப்பாகன் உதயகுமார்.

பாகன் உதயகுமார்
யானைகள் ஏன் கோபப்படுகின்றன? பராமரிக்கப்படுவது எப்படி? - மலைக்கோட்டை யானை லட்சுமியின் பாகன் விளக்கம்!

கண்ணீர் வடித்த தெய்வானை

இந்த சூழலில் தான் எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்தது. இது யானை பாகன் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் திருச்செந்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே உதயகுமார் தெய்வானைக்கு தண்ணீர் வழங்க அதனருகே இருக்கும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது...

திருச்செந்தூர் தெய்வானை யானையுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்
திருச்செந்தூர் தெய்வானை யானையுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்

யானையும் தனது கோபமெல்லாம் தெளிந்ததும் உதயகுமாருக்காக கண்ணீர் வடித்ததாக கூறப்படும் சம்பவம் கேட்போரையும் கலங்க வைத்துள்ளது.

பாகன் உதயகுமார்
திருச்செந்தூர்: தாக்கிய பின் பாகனை எழுப்ப முயன்ற தெய்வானை... நடந்தது என்ன? – வனத்துறை விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com