இனி யாருக்கெல்லாம் RT PCR பரிசோதனை?-நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத்துறை

இனி யாருக்கெல்லாம் RT PCR பரிசோதனை?-நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத்துறை
இனி யாருக்கெல்லாம் RT PCR பரிசோதனை?-நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத்துறை
Published on

இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்.

A வகை : லேசான காய்ச்சல், இருமல்

B வகை : 1. தீவிர காய்ச்சல், அதிக இருமல்

2. தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர்

மேற்கூறிய யு, B பிரிவினர் யாருக்குமே இன்புளுயன்சாவிற்கான பரிசோதனையோ, மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலே போதுமானது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

C வகை: தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, இரத்த அழுத்த குறைவு ஆகியவை இருந்தாலோ அல்லது குழந்தைகளுக்கு இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருந்தாலோ Influenza வை கண்டறிவதற்கான RT PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104, 108 எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். மருத்துவமனைகளை பொறுத்தவரை தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகங்களில் பணி புரிவோர் கட்டாயம்  N85  முகக் கவசமும் மற்ற அனைவரும் மூன்றடுக்கு முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதைத்தவிர மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,கர்ப்பிணிகள் மற்றும் இணை நோயுள்ளோரும் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com