கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு
கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு
Published on

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரத்தில் விஷம் அருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி மதுரையில் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டு, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவருக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் குற்றவுணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றார். விஷம் அருந்திய அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் 4 நாட்களுக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மதுரையில் உயிரிழந்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com