வெப்சீரிஸுக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் - பாஜக தமிழக தலைவர்

வெப்சீரிஸுக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் - பாஜக தமிழக தலைவர்
வெப்சீரிஸுக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் - பாஜக தமிழக தலைவர்
Published on

வெப்சீரிஸூக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய
அவர், ‘காட்மேன்’ வெப்சீரிஸின் வசனம் கண்டிக்கத்தக்கது என்றும், வெப்சீரிஸூக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும்,

' கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை பாரதம் திட்டம் வெற்றி கண்டுள்ளது. மோடி சக்தி வாய்ந்த தலைவர். கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்திற்கு உலக நாடுகள் பாராட்டுகள் தெரிவித்துள்ளன.பாஜக சார்பில் தமிழகத்தில் 40 லட்சம் முகக் கவசங்கள் கொடுத்துள்ளோம். வழிபாட்டு தலங்களை தமிழகத்தில் திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். கட்சித்தலைவர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொடர்பான சிகிச்சை செலவை குறைத்து வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com