கணவருடன் சென்று வாக்களித்த நடிகை குஷ்பு, பின்னர், தனது சமூக வலைதள கணக்கில், Vote4INDIA என்று பதிவிட்டார். இதனால், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அவர் பதிவிட்டதாக குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பதிவிலேயே 400 எம். பிக்கள் கிடைக்க வாக்களியுங்கள் என அவர் திருத்தம் செய்தார். தான் ஒருபோதும் இந்தியா கூட்டணியை ஆதரித்ததில்லை என்றும், Vote4INDIA என்பது இந்தியாவுக்காக வாக்கு கோருவதுதான் என்றும் குஷ்பு விளக்கம் அளித்தார்.
இதேபோல, சென்னையில் தனது வாக்கை செலுத்திய பின் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த ராதிகா சரத்குமார், மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக கூறினார். பத்தாண்டுகால மோடி ஆட்சியைப்பற்றி கூறிய பின் ராதிகா இவ்வாறு கூறியதால் குழப்பம் ஏற்பட்டநிலையில், அவரே அதற்கு விளக்கம் அளித்தார்.
ஒரே கட்சியைச் சார்ந்த இரு நடிகைகளும் தங்கள் குழப்பமாக சமூக வலைதள பதிவாலும், பேச்சாலும் தேர்தல் நாளில் பேசுபொருளாகினர்.